Lord Shiva Temples of Tamil Nadu

Arulmigu Dharmalingeshwarar Temple, Nanganallur

Written by Sivapuranam Mission | Mar 18, 2025 7:53:13 AM

இந்த கோயிலின் முக்கிய தெய்வமாக சிவபெருமான் தர்மலிங்கேஸ்வர்.  அவர் தனது துணைவியார் சர்வமங்கலாம்பிகையுடன் பக்தர்களுக்கு நங்கநல்லூரில் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயம் செம்போம்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. 1000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான இக்கோயிலின் சில கட்டமைப்புகள் செய்து காலப்போக்கில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. கருவறையைச் சுற்றி நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் சந்திகேஸ்வரர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். கோயிலில் விஷ்ணு துர்கை, சுப்பிரமணியர், வைரவர், வீரபத்திரர் மற்றும் நவகிரகங்களுக்கு தனி சன்னதிகள் உள்ளன. முக்கிய விழாக்களில் பங்குனி பிரம்மோத்ஸவம், பாவித்ரோடட்சவம், சந்தி ஹோமம், மகா சிவராத்திரி, கார்த்திகை சோமவாரம் மற்றும் ஸ்கந்தா சஷ்டி சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.



சோழச் சக்கவர்த்தி ராஜராஜன் தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காலத்தில், அவர் சோழக் குலத்தின் மன்னனாக இருந்தான். தனது ஆணைக்கீழ் உள்ள கோயில்களில் உழுவாரப் பணிசெய்தான்.  ஒருமுறை, அவர் தன்னிச்சையாக நங்கநல்லூர்க்குச் சென்றபோது, அங்கு பசுமையான வயல்வெளிகள் காணப்பட்டன. அவற்றைப் பார்த்து  அங்கேயே தங்கினார்.
 
இரவு முடிந்தபின், அரசன் எழுந்திருக்காததை கண்ட வீரர்கள், அவனை எழுப்பவும் பயந்தனர். இந்த நேரத்தில் கோயிலில் மணி ஒலித்தது. மன்னன் விழித்துக் கொண்டான், ஒசை வந்த திசை நோக்கி சென்ற சோழ மன்னனுக்கு லிங்க வடிவில் காட்டி தந்தார் சிவன். 

 


இந்த தரிசனத்தினால் மன்னன் மகிழ்ந்தாலும்‌, கோயில்‌ மிகவும்‌ சிதிலமடைந்திருப்பது கண்டு வருந்தினான்‌. அத்துடன்‌ தன்னை எழுப்பிய ஈசனின்‌ ஆலயத்தில்‌ தினமும்‌ கோயில்‌ மணியோசை கேட்க வேண்டும்‌ என நினைத்தான்‌. இதனால் சிவபெருமானின்‌ தர்மலிங்கேஸ்வர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
 
சோழர் காலத்திற்கும் முற்பட்ட இந்தத் தலத்தின் புரானப் பெயர் தன்மீஸ்வரம் என அறியப்படுகிறது. இவ்விடத்தின் மூலமூர்த்தியான இறைவன் தர்மலிங்கேஸ்வரர், அவருக்கு தன்மீஸ்வரர், வீரசிங்கர் என்ற திருநாமங்களும் வழங்கப்பட்டுள்ளன. 
 
அம்மன் சர்வமங்களா தேவி, இத்தலத்தின் பலவிருச்சம் வில்வம் ஆகும். இங்கு சக்தியின் ஆட்சி நடைபெறுவதால் புண்ணியத் தலமாகக் கருதப்படுகிறது.

இங்கு அழகிய மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் எழிலுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், கவியரங்கமும், ராஜராஜேஸ்வரரின் கதை சிற்ப வடிவில் காணப்படுகின்றன.
 
அம்மன் கோயில்களில் தீபாராதனையின் போது "சர்வமங்கல மாங்கல்யே சிவே" என்ற மந்திரம் முழங்கும். அந்த சர்வமங்களா தேவி இத்தலத்தில் அருள்பாலித்து வருகிறார். இவரது திருநாமம் லலிதா சகஸ்ரநாமத்தில் இருநூறாவது பெயராக இடம்பெற்றுள்ளது.


கோயில் நேரம்

கிழமை காலை மாலை
ஞாயிற்றுக்கிழமை 6.30–12.30  5.00–8.30
திங்கட்கிழமை 6.30–12.30  5.00–8.30
செவ்வாய்க்கிழமை 6.30–12.30  5.00–8.30
புதன்கிழமை 6.30–12.30  5.00–8.30
வியாழக்கிழமை 6.30–12.30  5.00–8.30
வெள்ளிக்கிழமை 6.30–12.30  5.00–8.30
சனிக்கிழமை 6.30–12.30  5.00–8.30

 





 

 

 

 

                                                                                                       

முகவரி

வோல்டாஸ் காலனி சாலை, எஸ்வரன் காலனி, லட்சுமி நகர், ஏஜிஎஸ் காலனி, நங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு - 600061.
 
Voltas Colony Road, Eswaran Colony, Lakshmi Nagar, AGS Colony, Nanganallur, Chennai, Tamil Nadu - 600061.

 

 

Keywords: Shiva Temples in Tamil Nadu, Famous Shiva Temples, Ancient Shiva Temples, Paadal Petra Sthalams, Tevaram Hymns, Thiruvasagam Lyrics, Sivapuranam Meaning, Devaram Songs, Siddhar Temples, Manikkavacakar, Appar Hymns, Sambandar Songs, Sundarar Hymns, Thiruvasagam Translation, Thiruvasagam Audio, Thiruvasagam Meaning, Thiruvasagam Lyrics Tamil, Thiruvasagam Lyrics in Tamil Translation, Thiruvasagam Lyrics PDF, Thiruvasagam Lyrics in Tamil, Thiruvasagam Lyrics in Tamil Transliteration, Thiruvasagam Lyrics in Tamil Transliteration PDF, Thiruvasagam Lyrics in Tamil Transliteration MP3, சிவபுராணம், கீர்த்தித் திருவகவல்,  திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம் நந்தினி, திருச்சதகம், திருச்சதகம்-மெய்யுணர்தல், அறிவுறுத்தல், சுட்டறுத்தல், ஆத்ம சுத்தி, கைமாறு கொடுத்தால், அநுபோகசுத்தி, காருணியத்திறன்கள், ஆனந்தத் தழுந்தல், ஆனந்த பரவசம், ஆனந்தாதீதம்  நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை, திரு அம்மானை, திருப்பொற் சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருஉந்தியார், திருத்தோள் நோக்கம், திருப்பொன்னூசல், அன்னைப் பத்து, குயிற்பத்து, திருத்தசாங்கம், திருப்பள்ளியெழுச்சி, கோயில் மூத்த திருப்பதிகம், கோயில் திருப்பதிகம், செத்திலாப் பத்து, அடைக்கலப் பத்து, ஆசைப்பத்து, அதிசயப் பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, திக்கழுக்குன்றப் பதிகம், கண்டபத்து, பிரார்த்தனைப் பத்து, குழைத்த பத்து, உயிருண்ணிப்பத்து, அச்சப்பத்து, திருப்பாண்டிப் பதிகம்,  பிடித்த பத்து, திருவேசறவு, திருப்புலம்பல்,  குலாப் பத்து, அற்புதப்பத்து, சென்னிப்பத்து,  திருவார்த்தை, எண்ணப்பதிகம், யாத்திரைப் பத்து, திருப்படை எழுச்சி,  திருவெண்பா,  பண்டாய நான்மறை, திருப்படை ஆட்சி, ஆனந்தமாலை, அச்சோப் பதிகம்.