Lord Shiva Temples of Tamil Nadu

Arulmigu Karaneeswarar Temple, Saidapet

Written by Sivapuranam Mission | Mar 18, 2025 7:57:51 AM

காரணீஸ்வர் கோவில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், சென்னை மாவட்டத்தின் மேற்கு சைதாப்பேட்டையில் அமைந்துள்ள ஒரு பழமையான சிவாலயமாகும். இது திருக்காரணீசுவரம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் மூலவர் காரணீஸ்வரர், தாயார் சொர்ணாம்பிகை. 450 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த சிவாலயம், தமிழகத்தின் முக்கியமான சிவத்தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த கோயிலில் பழனி ஆண்டவர் சன்னதி, ஆஞ்சநேயர் சுவாமி, வீரபத்திரர், சனீஸ்வரர், நவக்ரஹம், வினாயகர் மற்றும் சுப்ரமணியர் போன்ற பல முக்கிய சன்னதிகள் அமைந்துள்ளன. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் இந்த கோயில் செயல்பட்டு வருகிறது.



தேவேந்திரனிடம் இருந்து காமதேனு எனும் தெய்வ பசுவை பெற்ற வசிஷ்ட முனிவர், பூஜையின் போது இடையூறு செய்ததாக கருதி, அதை காட்டுப்பசுவாக மாற்றினார். இதனை அறிந்த தேவேந்திரன், இந்த பகுதிக்கு மழையைப் பொழிந்து அதை சோலையாக மாற்றினார். பின்னர் சிவனை நோக்கி லிங்க பிரதிஷ்டை செய்து, காமதேனுவை மீட்டார். இதனால், இந்த பகுதி திருக்காரணி என்று அழைக்கப்பட்டது. இதனைக் தொடர்ந்து, இங்கு சிவன் கோவில் நிறுவப்பட்டு, மூலவர் காரணீஸ்வரர் என்று புகழ் பெற்றார்.
 
இந்த கோயிலில் இந்திரன், மால், அயன் போன்ற தேவக்களும், சிவசைதனிய முனிவர், ஆதொண்ட சக்கரவர்த்தி, குருலிங்க சுவாமி உள்ளிட்ட சிவத்தொண்டர்களும் வழிபட்டு முக்தி பெற்றுள்ளனர் என வரலாறு கூறுகிறது.

 


இச்சிவாலயம் தென்திசையில் ராஜகோபுரத்தினை கொண்டுள்ளது. இந்த ராஜகோபுரத்தின் நுழைவாயிலில் பத்ரகிரியார் மற்றும் பட்டினத்தார் சிலைகள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 
 
உள் சுற்றுப் பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களும், தட்சிணாமூர்த்தி, திருமால், சண்டேசர், துர்க்கை, பைரவர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. இவை பக்தர்களுக்கு ஆன்மிக பரவசத்தை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. 
 
அத்துடன், வேதகிரீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கத் திருமேனியும், திரிபுரசுந்தரி அம்மனும் வெளிச்சுற்றில் தனிச்சந்நிதிகளில் வீற்றிருக்கின்றனர். 
 
இக்கோவிலில் காமிகா ஆகமத்தின்படி பூஜைகள் நடைபெறுகின்றன. பிரம்மோற்சவ விழாவின் எட்டாம்நாள், திருஞானசம்மந்தர் ஞானப்பால் அருந்திய நிகழ்ச்சி நடைபெறுகிறது. இக்கோவிலின் திருக்குள நுழைவுவாயிலில், குழந்தையாக இருந்த ஞானசம்மந்தருக்கு அம்மை பாலுட்டிய காட்சி சிற்பமாக அமைந்துள்ளது.


கோயில் நேரம்

கிழமை காலை மாலை
ஞாயிற்றுக்கிழமை 6.00–11.00  4.00–9.00
திங்கட்கிழமை 6.00–11.00  4.00–9.00
செவ்வாய்க்கிழமை 6.00–11.00  4.00–9.00
புதன்கிழமை 6.00–11.00  4.00–9.00
வியாழக்கிழமை 6.00–11.00  4.00–9.00
வெள்ளிக்கிழமை 6.00–11.00 4.00–9.00
சனிக்கிழமை 6.00–11.00  4.00–9.00

 





 

 

 

 

                                                                                                       

முகவரி

1, காரணீஸ்வரர் கோவில் தெரு, சூரியம்மாபேட்டை, சைதாப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு 600015.
 
1, Karaneeswarar Koil Street, Suriyammapet, Saidapet, Chennai, Tamil Nadu 600015.

Temple Website

 

 

 

Keywords: Shiva Temples in Tamil Nadu, Famous Shiva Temples, Ancient Shiva Temples, Paadal Petra Sthalams, Tevaram Hymns, Thiruvasagam Lyrics, Sivapuranam Meaning, Devaram Songs, Siddhar Temples, Manikkavacakar, Appar Hymns, Sambandar Songs, Sundarar Hymns, Thiruvasagam Translation, Thiruvasagam Audio, Thiruvasagam Meaning, Thiruvasagam Lyrics Tamil, Thiruvasagam Lyrics in Tamil Translation, Thiruvasagam Lyrics PDF, Thiruvasagam Lyrics in Tamil, Thiruvasagam Lyrics in Tamil Transliteration, Thiruvasagam Lyrics in Tamil Transliteration PDF, Thiruvasagam Lyrics in Tamil Transliteration MP3, சிவபுராணம், கீர்த்தித் திருவகவல்,  திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம் நந்தினி, திருச்சதகம், திருச்சதகம்-மெய்யுணர்தல், அறிவுறுத்தல், சுட்டறுத்தல், ஆத்ம சுத்தி, கைமாறு கொடுத்தால், அநுபோகசுத்தி, காருணியத்திறன்கள், ஆனந்தத் தழுந்தல், ஆனந்த பரவசம், ஆனந்தாதீதம்  நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை, திரு அம்மானை, திருப்பொற் சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருஉந்தியார், திருத்தோள் நோக்கம், திருப்பொன்னூசல், அன்னைப் பத்து, குயிற்பத்து, திருத்தசாங்கம், திருப்பள்ளியெழுச்சி, கோயில் மூத்த திருப்பதிகம், கோயில் திருப்பதிகம், செத்திலாப் பத்து, அடைக்கலப் பத்து, ஆசைப்பத்து, அதிசயப் பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, திக்கழுக்குன்றப் பதிகம், கண்டபத்து, பிரார்த்தனைப் பத்து, குழைத்த பத்து, உயிருண்ணிப்பத்து, அச்சப்பத்து, திருப்பாண்டிப் பதிகம்,  பிடித்த பத்து, திருவேசறவு, திருப்புலம்பல்,  குலாப் பத்து, அற்புதப்பத்து, சென்னிப்பத்து,  திருவார்த்தை, எண்ணப்பதிகம், யாத்திரைப் பத்து, திருப்படை எழுச்சி,  திருவெண்பா,  பண்டாய நான்மறை, திருப்படை ஆட்சி, ஆனந்தமாலை, அச்சோப் பதிகம்.