Lord Shiva Temples of Tamil Nadu

Arulmigu OnaKantheeswarar Temple, Kanchipuram

Written by Sivapuranam Mission | Mar 18, 2025 8:41:29 AM

ஓணகந்தீஸ்வரர் கோவில், ஓணகந்தளி என்றழைக்கப்படும்  இந்து பிரசித்தி பெற்ற கோவில், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம், பஞ்சுபேட்டையில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தத் திருக்கோயிலில், இறைவன் "ஓணகந்தீஸ்வரர்" என்றும், அவரது துணைவி பார்வதி தேவியார் "காமாட்சி" என்றும் வணங்கப்படுகிறார். இந்தக் கோவிலுக்கு சிறிய மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. இங்கு சிவன், மூன்று லிங்கங்களாக ஓணகந்தீஸ்வரர், காந்தீஸ்வரர், சலந்தரீஸ்வரர் எனத் திருவுருவமளிக்கிறார். இங்குள்ள இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 235 வது தேவாரத்தலம் ஆகும். கோவிலின் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தை தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்கிறது.



தென்கிழக்குத் திசையில் உள்ள புழல் கோட்டையின் பாதுகாவலர்களாக இருந்த அசுரராஜாவின் தளபதிகள் ஓனன் மற்றும் காந்தன். ஓனன் அங்கிருந்த ஒரு சுயம்புலிங்கத்தை கண்டுபிடித்து, தனது இரத்தத்தால் அபிஷேகம் செய்து கடுமையான தவம் செய்து பல வரங்களை பெற்றார். 
 
கந்தனும் ஜலந்தராசுரன் லிங்கத்தை கண்டுபிடித்து, பூஜை செய்து சிறந்த பல வரங்களைப் பெற்றார்.  பிற்காலத்தில் சிவனின் தோழரான சுந்தரர் இப்பகுதிக்கு வந்தார். மூன்று லிங்கங்கள் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளதை பார்த்தார். அசுரர்களும் பரம சிவ பக்தர்கள், மூன்று லிங்கங்களை பாதுகாக்கவும் செய்து பின்னர் கோயில் எழுப்பனார்.

 


அவர் இறைவனைப் பாடல்களால் போற்றினார். ஆனால், இறைவன் உடனடியாக பதில் அளிக்காமல், பிறகு ஒரு புளியமரத்தை காட்டி மறைந்தார். அதன் பின்னர், சுந்தரர் அந்த மரத்தின் பழங்கள் தங்கமாக மாறுவதை கண்டார். அந்த தங்கத்தை பயன்படுத்தி, மூன்று சுயம்பு சிவலிங்கங்களுக்கு கோயில் கட்டினார்.
 
அதேபோல், பஞ்சுபேட்டையில் இருந்த அனைத்து காய்கறிகளும் சந்தரரின் பதிகங்களை கேட்டவுடன் பொன்னாக மாறின. பின்னர், லிங்கங்களை பாதுகாப்பாக வெளியே எடுத்துச் சென்று, கிடைத்த நிதியில் கோவில் எழுப்பினார்.  
 
இது மிக அரிய தரிசனம் ஆகும். அர்த்த மண்டபத்தில், சுந்தரரும் இறைவனின் திருப்பாத தரிசனமும் கிடைக்கிறது. மேலும், இங்குள்ள வயிறுதாரி விநாயகர் பக்தர்களின் வேண்டுதல்களை உணர்ந்து, அருள் பாலிப்பார். 

ஓணகாந்தேஸ்வரர் சன்னதியின் கோஷ்டத்தில் பாலவிநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். முன்புறத்தில் பலி பீடம் மற்றும் நந்தி உள்ளன. இங்கு குமார வேலன், பைரவர், சூரியன் நவக்கிரகம், அகோர வீரபத்திரர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.
  
சிவாலயத்தில், அவரிடம் பஞ்சியுடன் காது வைத்து கேட்டால், "ஓம்" என்ற மெல்லிய அதிர்விய ஒலி கேட்பதாக வழங்கப்படுகிறது.


கோயில் நேரம்

கிழமை காலை மாலை
ஞாயிற்றுக்கிழமை 5.30–12.15 4.00–8.15
திங்கட்கிழமை 5.30–12.15 4.00–8.15
செவ்வாய்க்கிழமை 5.30–12.15 4.00–8.15
புதன்கிழமை 5.30–12.15 4.00–8.15
வியாழக்கிழமை 5.30–12.15 4.00–8.15
வெள்ளிக்கிழமை 5.30–12.15 4.00–8.15
சனிக்கிழமை 5.30–12.15 4.00–8.15

 





 

 

 

 

                                                                                                       

முகவரி

ஓனா காந்தன் தலி, பஞ்சுபேட்டை, காஞ்சிபுரம் - 631 502.
 
Ona Kandhan Dhali, Panchupettai,
Kanchipuram - 631 502.

 

 

 

Keywords: Shiva Temples in Tamil Nadu, Famous Shiva Temples, Ancient Shiva Temples, Paadal Petra Sthalams, Tevaram Hymns, Thiruvasagam Lyrics, Sivapuranam Meaning, Devaram Songs, Siddhar Temples, Manikkavacakar, Appar Hymns, Sambandar Songs, Sundarar Hymns, Thiruvasagam Translation, Thiruvasagam Audio, Thiruvasagam Meaning, Thiruvasagam Lyrics Tamil, Thiruvasagam Lyrics in Tamil Translation, Thiruvasagam Lyrics PDF, Thiruvasagam Lyrics in Tamil, Thiruvasagam Lyrics in Tamil Transliteration, Thiruvasagam Lyrics in Tamil Transliteration PDF, Thiruvasagam Lyrics in Tamil Transliteration MP3, சிவபுராணம், கீர்த்தித் திருவகவல்,  திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம் நந்தினி, திருச்சதகம், திருச்சதகம்-மெய்யுணர்தல், அறிவுறுத்தல், சுட்டறுத்தல், ஆத்ம சுத்தி, கைமாறு கொடுத்தால், அநுபோகசுத்தி, காருணியத்திறன்கள், ஆனந்தத் தழுந்தல், ஆனந்த பரவசம், ஆனந்தாதீதம்  நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை, திரு அம்மானை, திருப்பொற் சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருஉந்தியார், திருத்தோள் நோக்கம், திருப்பொன்னூசல், அன்னைப் பத்து, குயிற்பத்து, திருத்தசாங்கம், திருப்பள்ளியெழுச்சி, கோயில் மூத்த திருப்பதிகம், கோயில் திருப்பதிகம், செத்திலாப் பத்து, அடைக்கலப் பத்து, ஆசைப்பத்து, அதிசயப் பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, திக்கழுக்குன்றப் பதிகம், கண்டபத்து, பிரார்த்தனைப் பத்து, குழைத்த பத்து, உயிருண்ணிப்பத்து, அச்சப்பத்து, திருப்பாண்டிப் பதிகம்,  பிடித்த பத்து, திருவேசறவு, திருப்புலம்பல்,  குலாப் பத்து, அற்புதப்பத்து, சென்னிப்பத்து,  திருவார்த்தை, எண்ணப்பதிகம், யாத்திரைப் பத்து, திருப்படை எழுச்சி,  திருவெண்பா,  பண்டாய நான்மறை, திருப்படை ஆட்சி, ஆனந்தமாலை, அச்சோப் பதிகம்.