Lord Shiva Temples of Tamil Nadu

Sri Sapthapureeswarar Temple, Thirukolakka

Written by Sivapuranam Mission | Apr 4, 2025 5:40:48 AM

திருக்கோலக்கா சப்தபுரீஸ்வரர் கோவில் தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தமான இந்து கோவிலாகும். இத்தலத்தின் வரலாற்றுப் பெயர் சப்தபுரி ஆகும். பிரதான தெய்வம் சிவன் சப்தபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அவரது துணைவி ஓசை கொடுத்த நாயகி என அறியப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், காவிரி வடகரையில் அமைந்துள்ள 15வது திருத்தலமாக திருக்கோலக்கா விளங்குகிறது. இக்கோவிலில் பெரிய பிள்ளையார், மகாலட்சுமி, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, சூரியன், சந்திரன் ஆகிய தெய்வங்கள் வீற்றிருக்கின்றனர். மேலும், சனி பகவானுக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பஞ்சலிங்கங்கள் என்பதும் சிறப்பானது.



பார்வதிதேவியால் ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தர், பல சிவத்தலங்களை வணங்கிச் செல்லும்போது தன் சிறு கைகளால் தாளம் அடித்தபடி பாடி மகிழ்ந்தார். குழந்தையின் கைகள் வலிக்கும் என்று கருதிச் சிவபெருமான் அவனுக்குத் தங்கத் தாளங்களை அருளினான்.
 
ஆனால் அவற்றில் ஓசை எழவில்லை. உடனே அன்னை பார்வதி அந்த தாளங்களுக்கு ஒலி சக்தியை அளித்தாள். எனவே இத்தலத்தின் மூலவர் “தாளபுரீஸ்வரர்” என்றும் அம்மன் “ஓசைநாயகி” என்றும் அழைக்கப்படுகின்றனர்.

 


இந்த கோயிலின் திருக்குளம் சூரிய பகவானால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும், கோயிலின் தென்கிழக்கில் தல விருட்சமாக விளங்கும் கொன்றை மரம் ஒரே வேரில் மூன்று தனித்த மரங்களாக வளர்ந்துள்ளது.
 
வாய் பேச முடியாதவர்கள் இங்கு வந்து ஆனந்த தீர்த்தத்தில் நீராடி, ஓசைநாயகியிடம் "ஜடப்பொருளான தாளத்திற்கு ஓசை கொடுத்த நாயகியே, பேசும் சக்தியைக் கொடு" என வேண்டிக் கொண்டு, அம்மன் பாதத்தில் தேனை வைத்து அர்ச்சனை செய்து அதை எடுத்துச் சாப்பிட வேண்டும்.
 
மகாலட்சுமி தவம் செய்து மகாவிஷ்ணுவை திருமணம் செய்த தலம் என்பதால், திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் இங்கு உள்ள மகாலட்சுமிக்கு தொடர்ச்சியாக 6 வாரங்கள் மஞ்சள் பொடியால் அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது.

இசைக்கலையில் ஆர்வமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு சென்றால், இசையில் வல்லமை பெறலாம். கோயிலின் நுழைவாயிலிலேயே ஞானசம்பந்தருக்கு தாளம் கொடுக்கும் ஈசனும், ஓசை கொடுக்கும் நாயகியும் அருள்பாலிக்கின்றனர். 
 
இங்கு உள்ள மகாலட்சுமி மிகவும் சக்திவாய்ந்தவள், எல்லா செல்வங்களையும் அருளக்கூடியவள். திருமகள் தவம் செய்து திருமாலுடன் இணைந்த தலம் என்பதால், இத்தலம் 'திருக்கோலக்கா' என அழைக்கப்படுகிறது.
 
ஓசை நாயகியின் சன்னதியில் சொற்பொழிவு நடத்துபவர்கள் மற்றும் இன்னிசை நிகழ்த்துபவர்கள் மாபெரும் புகழை பெறுவார்கள் என்பது உறுதியான உண்மை. தற்போது இத்தலம் 'திருத்தாளமுடையார் கோவில்' எனப் பெயர் பெற்றுள்ளது.


கோயில் நேரம்

கிழமை காலை மாலை
ஞாயிற்றுக்கிழமை 7.30–11.30  5.00–8.00
திங்கட்கிழமை 7.30–11.30  5.00–8.00
செவ்வாய்க்கிழமை 7.30–11.30  5.00–8.00
புதன்கிழமை 7.30–11.30  5.00–8.00
வியாழக்கிழமை 7.30–11.30  5.00–8.00
வெள்ளிக்கிழமை 7.30–11.30  5.00–8.00
சனிக்கிழமை 7.30–11.30  5.00–8.00

 





 

 

 

 

                                                                                                       

முகவரி

திருக்கோலக்கா, சீர்காழி, தமிழ் நாடு - 609110.
 
Thirukolakka, Sirkali, Tamil Nadu – 609110.

 

 

 

Keywords: Shiva Temples in Tamil Nadu, Famous Shiva Temples, Ancient Shiva Temples, Paadal Petra Sthalams, Tevaram Hymns, Thiruvasagam Lyrics, Sivapuranam Meaning, Devaram Songs, Siddhar Temples, Manikkavacakar, Appar Hymns, Sambandar Songs, Sundarar Hymns, Thiruvasagam Translation, Thiruvasagam Audio, Thiruvasagam Meaning, Thiruvasagam Lyrics Tamil, Thiruvasagam Lyrics in Tamil Translation, Thiruvasagam Lyrics PDF, Thiruvasagam Lyrics in Tamil, Thiruvasagam Lyrics in Tamil Transliteration, Thiruvasagam Lyrics in Tamil Transliteration PDF, Thiruvasagam Lyrics in Tamil Transliteration MP3, சிவபுராணம், கீர்த்தித் திருவகவல்,  திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம் நந்தினி, திருச்சதகம், திருச்சதகம்-மெய்யுணர்தல், அறிவுறுத்தல், சுட்டறுத்தல், ஆத்ம சுத்தி, கைமாறு கொடுத்தால், அநுபோகசுத்தி, காருணியத்திறன்கள், ஆனந்தத் தழுந்தல், ஆனந்த பரவசம், ஆனந்தாதீதம்  நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை, திரு அம்மானை, திருப்பொற் சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருஉந்தியார், திருத்தோள் நோக்கம், திருப்பொன்னூசல், அன்னைப் பத்து, குயிற்பத்து, திருத்தசாங்கம், திருப்பள்ளியெழுச்சி, கோயில் மூத்த திருப்பதிகம், கோயில் திருப்பதிகம், செத்திலாப் பத்து, அடைக்கலப் பத்து, ஆசைப்பத்து, அதிசயப் பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, திக்கழுக்குன்றப் பதிகம், கண்டபத்து, பிரார்த்தனைப் பத்து, குழைத்த பத்து, உயிருண்ணிப்பத்து, அச்சப்பத்து, திருப்பாண்டிப் பதிகம்,  பிடித்த பத்து, திருவேசறவு, திருப்புலம்பல்,  குலாப் பத்து, அற்புதப்பத்து, சென்னிப்பத்து,  திருவார்த்தை, எண்ணப்பதிகம், யாத்திரைப் பத்து, திருப்படை எழுச்சி,  திருவெண்பா,  பண்டாய நான்மறை, திருப்படை ஆட்சி, ஆனந்தமாலை, அச்சோப் பதிகம்.