Lord Shiva Temples of Tamil Nadu

Vadaranyeswarar Swamy Temple, Tiruvalangadu

Written by Sivapuranam Mission | Mar 26, 2025 5:33:47 AM

திருவாலங்காடு வட ஆரண்யேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் தேவாரம் பாடல் பெற்ற புகழ்பெற்ற சிவாலயமாகும். தொண்டை நாட்டில் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் 15-ஆம் இடத்தில் போற்றப்படும் இத்தலம், சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் தலம் ஆகும். நடராஜ பெருமான் நடமாடும் ஐம்பெரும் அம்பலங்களில், திருவாலங்காட்டுத் திருக்கோயில் "ரத்தின சபை" என சிறப்பிக்கப்படுகிறது. அம்மையே என இறைவனால் போற்றப்பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து, நடராஜரின் திருவடியின் கீழிருந்து சிவானந்தத்தில் திளைத்தபுனிதத் திருத்தலம் இதுவாகும். மேலும், 51 சக்தி பீடங்களில் காளி சக்தி பீடமாக இத்தலம் விளங்குகிறது. திருவாலங்காடு சிவாலயம், தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 248-ஆம் தேவாரத்தலமாக போற்றப்படுகிறது. இத்திருக்கோயிலில் விநாயகர், முருகர், பத்ரகாளி, இரத்தினசபை, நால்வர், பஞ்சமுக லிங்கங்கள், ஷண்முகர், வீரபத்திரர், சகஸ்ரலிங்கம், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர் சன்னதி, பைரவர் சன்னதி, சப்தமாதா, ஐயப்பன், உபதேச தட்சிணாமூர்த்தி, பத்ரகாளியம்மன் ஆகிய தெய்வங்களின் திருமேனிகளை தரிசிக்கலாம். இந்த கோயிலை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை பராமரித்து நிர்வகிக்கிறது.



கம்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள், ஆலமரங்கள் நிறைந்த காட்டில் தங்கி, தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்தனர். அவர்கள் ஏற்படுத்திய பாதிப்பால் வருந்தியவர்கள், சிவன் மற்றும் பார்வதியிடம் சென்று முறையிட்டனர். இதனை கேட்ட பார்வதி தேவி, தன் பார்வையால் காளியை உருவாக்கி, அந்த அரக்கர்களை அழித்து விட்டாள். பின்னர், ஆலங்காட்டின் தலைவியாகவும் காளி நிலைபெற்றாள்.
 
அரக்கர்களை அழித்த காளி, அவர்களின் ரத்தத்தை உண்டு கொதித்து, பல கோர செயல்களை புரிந்தாள். இதனால் முஞ்சிகேச கார்க்கோடக முனிவர், ஆலங்காட்டில் அமைதியை ஏற்படுத்த சிவனை வேண்டினார். முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க, சிவன் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார்.

 


சிவனை கண்ட காளி, "நீ என்னுடன் நடனமாடி வெற்றிபெற்றால், இந்த ஆலங்காட்டை ஆளலாம்" என்று சவால் விட்டாள். சிவனும், காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். நடனத்தின் போது, தன் காதில் இருந்த மணியை கீழே விழவைத்து, பின்னர் தனது இடக்கால் பெருவிரலால் அதை எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார்.
 
இதைக் கண்ட காளி, சிவன் போல இவ்வகையான தாண்டவம் ஆட இயலாது என்று உணர்ந்து, தோல்வியை ஒப்புக்கொண்டாள். அப்போது, இறைவன் காளியின் முன் தோன்றி, என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் இல்லை.
 
எனவே, இத்தலத்தில் என்னை வழிபட வருபவர்கள், முதலில் உன்னை வழிபட்டு பிறகு என்னை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும் என்று வரமளித்தார். அந்த நாளிலிருந்து, காளி தனிக்கோயில் அமைந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்க தொடங்கினாள்.

காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் பெருமையுடன் விளங்குகிறது. தாமரை மலர் விரிந்ததுபோல் அமைந்து, அதன் மீது எழுந்துள்ள "கமலத்தேர்" இங்கு தனிச்சிறப்பாக காணப்படுகிறது.
 
பழங்காலத்தில், இத்தலம் ஆலமரக்காடாக இருந்து, இறைவன் அங்கு சுயம்புவாக தோன்றி நடனம் செய்ததால், இத்தலத்து இறைவன் வட ஆரண்யேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.
 
சனிபகவானின் மைந்தர் மாந்தி வழிபட்ட லிங்கம், பிரகாரத்தில் மாந்தீஸ்வரர் என்ற திருநாமம் பெற்றுத் தோன்றியுள்ளார். சனிக்கிழமைகளில், சனி தோஷம், மாந்தி தோஷம், மாங்கல்ய தோஷம் உள்ளிட்ட பிற தோஷங்கள் நீங்க, சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன.


கோயில் நேரம்

கிழமை காலை மாலை
ஞாயிற்றுக்கிழமை 6.00–12.00  4.00–8.00
திங்கட்கிழமை 6.00–12.00  4.00–8.00
செவ்வாய்க்கிழமை 6.00–12.00  4.00–8.00
புதன்கிழமை 6.00–12.00  4.00–8.00
வியாழக்கிழமை 6.00–12.00  4.00–8.00
வெள்ளிக்கிழமை 6.00–12.00 4.00–8.00
சனிக்கிழமை 6.00–12.00  4.00–8.00

 





 

 

 

 

                                                                                                       

முகவரி

Sannathi Street, Thiruvalangadu, Tiruvallur - 631210.
 
சன்னதி தெரு, திருவாலங்காடு, திருவள்ளூர் – 631210.

Temple Website

 

 

 

Keywords: Shiva Temples in Tamil Nadu, Famous Shiva Temples, Ancient Shiva Temples, Paadal Petra Sthalams, Tevaram Hymns, Thiruvasagam Lyrics, Sivapuranam Meaning, Devaram Songs, Siddhar Temples, Manikkavacakar, Appar Hymns, Sambandar Songs, Sundarar Hymns, Thiruvasagam Translation, Thiruvasagam Audio, Thiruvasagam Meaning, Thiruvasagam Lyrics Tamil, Thiruvasagam Lyrics in Tamil Translation, Thiruvasagam Lyrics PDF, Thiruvasagam Lyrics in Tamil, Thiruvasagam Lyrics in Tamil Transliteration, Thiruvasagam Lyrics in Tamil Transliteration PDF, Thiruvasagam Lyrics in Tamil Transliteration MP3, சிவபுராணம், கீர்த்தித் திருவகவல்,  திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம் நந்தினி, திருச்சதகம், திருச்சதகம்-மெய்யுணர்தல், அறிவுறுத்தல், சுட்டறுத்தல், ஆத்ம சுத்தி, கைமாறு கொடுத்தால், அநுபோகசுத்தி, காருணியத்திறன்கள், ஆனந்தத் தழுந்தல், ஆனந்த பரவசம், ஆனந்தாதீதம்  நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை, திரு அம்மானை, திருப்பொற் சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருஉந்தியார், திருத்தோள் நோக்கம், திருப்பொன்னூசல், அன்னைப் பத்து, குயிற்பத்து, திருத்தசாங்கம், திருப்பள்ளியெழுச்சி, கோயில் மூத்த திருப்பதிகம், கோயில் திருப்பதிகம், செத்திலாப் பத்து, அடைக்கலப் பத்து, ஆசைப்பத்து, அதிசயப் பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, திக்கழுக்குன்றப் பதிகம், கண்டபத்து, பிரார்த்தனைப் பத்து, குழைத்த பத்து, உயிருண்ணிப்பத்து, அச்சப்பத்து, திருப்பாண்டிப் பதிகம்,  பிடித்த பத்து, திருவேசறவு, திருப்புலம்பல்,  குலாப் பத்து, அற்புதப்பத்து, சென்னிப்பத்து,  திருவார்த்தை, எண்ணப்பதிகம், யாத்திரைப் பத்து, திருப்படை எழுச்சி,  திருவெண்பா,  பண்டாய நான்மறை, திருப்படை ஆட்சி, ஆனந்தமாலை, அச்சோப் பதிகம்.