பூலோகத்தில் முதன் முறையாக இத்திருக்கோயில் அமைக்கப்பட்டதாக கருதப்படும் காரணத்தால், இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான் "ஆதிபுரீஸ்வரர்" (சிவபெருமானின் முதல்வடிவம்) என்ற பெயரால் போற்றப்படுகிறார். தோற்றத்தில் மூலவர் திருவாரூர் தியாகேசரை ஒத்திருப்பதால், அவர் "தியாகராஜசுவாமி" என்றும் அழைக்கப்படுகிறார். வடசென்னையின் முக்கிய பகுதியாக விளங்கும் திருவொற்றியூரில், வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்கு தியாகராஜசுவாமி, வடிவுடை அம்மன், ஆதிபுரீஸ்வரர் மற்றும் வட்டப்பாறை அம்மன் ஆகிய தெய்வங்களின் சிலைகளை தரிசிக்கலாம்.
முன்னொரு காலத்தில், பூமியில் பிரளயம் ஏற்பட்டது. அதன் பிறகு, புதிய உலகம் உருவாக வேண்டும் என்று பிரம்மன் வேண்டிய போது, சிவபெருமான் தன் சக்தியால் வெப்பத்தை உண்டாக்கி, அந்த வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றிஎடுத்தார். இந்த வெப்பநீரின் காரணமாக, கோள வடிவத்திலிருந்து ஒரு மகிழ மரத்தடியில் சுயம்பு லிங்கம் தோன்றியது. பிரளய நீரை ஒற்றிஎடுத்ததனால், இத்தலத்திற்கு "ஒற்றியூர்" எனப் பெயர் பெற்றது.
மற்றொரு புராணக் கூறுகையில், சிவபெருமான் வாசுகி என்கிற பாம்பை தன்னுள் அடக்கிக் கொண்டதால் (ஒற்றிக் கொண்டதால்), அவர் "ஒற்றீசர்" என அழைக்கப்பட்டு, இத்தலம் "ஒற்றியூர்" என அறியப்பட்டது. பிரளயத்திற்குப் பிறகு தோன்றிய முதல் சுயம்பு இலிங்கமாக இருப்பதால், இத்தல இறைவன் "ஆதிபுரீஸ்வரர்" என போற்றப்படுகிறார். மேலும், வாசுகி பாம்பிற்கு அருள் புரிய, அவர் புற்று வடிவில் எழுந்தருளி தன்னுள் அடக்கிக் கொண்டதனால், "படம்பக்க நாதர்" என்றும் அழைக்கப்படுகிறார்.
இக்கோயிலைக் குறித்த பழமையான தல புராணம் வடமொழியில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தமிழில் தருமபுர ஆதினம் "திருவொற்றியூர் தலபுராணம்" என எழுதியதாக குறிப்பிடுகிறார். மேலும், காஞ்சிபுரம் சபாபதி முதலியார் "திருவொற்றியூர் புராணம்" என்ற நூலை எழுதியுள்ளார்.
இத்தலத்தைப் பற்றி மேலும் குறிப்பிடத்தக்க நூல்களில், சிவாநந்தயதிந்திர சுவாமி எழுதிய "திருவொற்றியூர் ஸ்தல புராண சாரம்" மற்றும் இராமநதம் பிள்ளை எழுதிய "திருவெற்றியூர் ஸ்தல புராணம்" ஆகியன முக்கியமானவை.
கோயிலின் வெளிப்பிரகாரத்தில் பல அதிசயங்கள் பக்தர்களைக் காத்திருக்கின்றன. இங்கு 27 நட்சத்திரங்களுக்கு உரிய 27 லிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களது பிறந்த நட்சத்திரத்திற்கேற்ப லிங்கங்களை வழிபடுகின்றனர்.
இந்த கோயில் பல்லவ காலத்திற்கு முந்தையதாகும் மற்றும் பல கல்வெட்டுகளை கொண்டுள்ளது. 8ஆம் நூற்றாண்டில் சங்கராச்சார்யா இங்கு விஜயம் செய்ததாக கூறப்படுகிறது. முதலில் பல்லவர்களால் கட்டப்பட்ட இதை, பின்னர் ராஜேந்திர சோழன் புதுப்பித்தார். சோழர் காலத்தில், தேவதாசிகள் இரு குழுக்களாகப் பிரிந்து, தியாகராஜர் மற்றும் வடிவுடை அம்மனுக்காக நடனமாடினர்.
வெளிப்பிரகாரத்தில் வளர்காளி, ஆகாசலிங்கம், அண்ணாமலையார், நாகலிங்கம், அத்திமரம், மீனாட்சிசுந்தரேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், பைரவர், சுப்ரமண்யர் ஆகியோர் தனிச்சன்னதியில் அருள்புரிகின்றனர். தெப்பக்குளம் அருகே கல்யாணசுந்தரேஸ்வரர் சன்னதி மற்றும் மகிழம்பூ மரம் அமைந்துள்ளது. இந்த மரத்தடியில் சிவன், சுந்தரருக்கும் சங்கிலியாருக்கும் அருள் வழங்கினார். இது ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கோயில் நேரம்
| கிழமை | காலை | மாலை |
| ஞாயிற்றுக்கிழமை | 6.00–12.00 | 4.00–8.30 |
| திங்கட்கிழமை | 6.00–12.00 | 4.00–8.30 |
| செவ்வாய்க்கிழமை | 6.00–12.00 | 4.00–8.30 |
| புதன்கிழமை | 6.00–12.00 | 4.00–8.30 |
| வியாழக்கிழமை | 6.00–12.00 | 4.00–8.30 |
| வெள்ளிக்கிழமை | 6.00–12.00 | 4.00–8.30 |
| சனிக்கிழமை | 6.00–12.00 | 4.00–8.30 |
|
முகவரி |
|
Keywords: Shiva Temples in Tamil Nadu, Famous Shiva Temples, Ancient Shiva Temples, Paadal Petra Sthalams, Tevaram Hymns, Thiruvasagam Lyrics, Sivapuranam Meaning, Devaram Songs, Siddhar Temples, Manikkavacakar, Appar Hymns, Sambandar Songs, Sundarar Hymns, Thiruvasagam Translation, Thiruvasagam Audio, Thiruvasagam Meaning, Thiruvasagam Lyrics Tamil, Thiruvasagam Lyrics in Tamil Translation, Thiruvasagam Lyrics PDF, Thiruvasagam Lyrics in Tamil, Thiruvasagam Lyrics in Tamil Transliteration, Thiruvasagam Lyrics in Tamil Transliteration PDF, Thiruvasagam Lyrics in Tamil Transliteration MP3, சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம் நந்தினி, திருச்சதகம், திருச்சதகம்-மெய்யுணர்தல், அறிவுறுத்தல், சுட்டறுத்தல், ஆத்ம சுத்தி, கைமாறு கொடுத்தால், அநுபோகசுத்தி, காருணியத்திறன்கள், ஆனந்தத் தழுந்தல், ஆனந்த பரவசம், ஆனந்தாதீதம் நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை, திரு அம்மானை, திருப்பொற் சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருஉந்தியார், திருத்தோள் நோக்கம், திருப்பொன்னூசல், அன்னைப் பத்து, குயிற்பத்து, திருத்தசாங்கம், திருப்பள்ளியெழுச்சி, கோயில் மூத்த திருப்பதிகம், கோயில் திருப்பதிகம், செத்திலாப் பத்து, அடைக்கலப் பத்து, ஆசைப்பத்து, அதிசயப் பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, திக்கழுக்குன்றப் பதிகம், கண்டபத்து, பிரார்த்தனைப் பத்து, குழைத்த பத்து, உயிருண்ணிப்பத்து, அச்சப்பத்து, திருப்பாண்டிப் பதிகம், பிடித்த பத்து, திருவேசறவு, திருப்புலம்பல், குலாப் பத்து, அற்புதப்பத்து, சென்னிப்பத்து, திருவார்த்தை, எண்ணப்பதிகம், யாத்திரைப் பத்து, திருப்படை எழுச்சி, திருவெண்பா, பண்டாய நான்மறை, திருப்படை ஆட்சி, ஆனந்தமாலை, அச்சோப் பதிகம்.








