அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான திருக்கோயிலாகும். இது 275 பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இந்தக் கோவில் 11ஆம் நூற்றாண்டில் சோழர்களால் பராமரிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் கிழக்கு ராஜகோபுரம், ரிஷி கோபுரம், மேற்குக் கோபுரம் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. கோயிலின் வளாகத்தில் பாப நாசினி, சித்திரைக்குளம் உள்ளது. மேலும், விஜயகணபதி சன்னதி, சுப்ரமணியர் சன்னதி, நடராஜர் சன்னதி, பைரவர் சன்னதி, கஜலட்சுமி சன்னதி ஆகிய தெய்வங்களின் சிலைகளை நாம் காணலாம்.
Get Your Free Sivapuranam Booklet
வசிஷ்டமுனிவர் செய்த சிவபூஜைக்காக, இந்திரன் தன்னிடமிருந்த காமதேனுவை அனுப்பி வைத்தான், பூஜை நேரத்தில் காமதேனு பால் சுரக்காமல் தாமதம் செய்யவே கோபம்கொண்ட முனிவர், அதன் புனிதத்தன்மை இழந்து காட்டுப்பசுவாக மாறும்படி சபித்தார்.
கலங்கிய காமதேனு, தனக்கு விமோசனம் கேட்க, இத்தலத்தில் வன்னி மரத்தடியில் சுயம்புலிங்கமாக உள்ள சிவனை வணங்கினால் விமோசனம் உண்டு என்று அறிந்தார். அதன்படி, இங்கு வந்த காமதேனு சுயம்புவாய் இருந்த சிவனிடம் தரிசனம் செய்து தினசரி பால் சுரந்து விமோசனம் பெற்றார். இதனால், இங்குள்ள இறைவன் “பால்வண்ணநாதர்' என்றும் அழைக்கப்படுகறார்.
ஒருமுறை, சிவனை தரிசிக்க காமதேனு வந்தபோது, அவரைக்கண்டு பயந்த காமதேனு ஓடியது. அப்போது இங்கிருந்த லிங்கத்தை அறியாமல் மிதித்ததில் சுவாமியின் மேனியில் தடம் பதிந்தது. இன்றும்கூட, சுவாமியின் தலையிலும், மார்பிலும் பசு மிதித்த தடம் இருக்கிறது.
மேலும், அகத்தியரின் வேண்டுகோளின்பேரில், இறைவன் நோய்களின் வகைகள், அவற்றிற்கான மூலிகைகள் மற்றும் மருந்துகளின் தன்மைகளை விளக்கி உபதேசமளித்தார். இதனால், இறைவன் "மருந்தீசுவரர்" என்ற திருநாமத்தால் புகழப்படுகிறது.
இத்திருக்கோயிலின் தலவிருட்சமாக வன்னி மரம் வெளிப்பிராகாரத்தின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. இத்தலமரத்தின் அடியில் பங்குனி பிரம்மோற்சவத்தின் போது இறைவன் அகத்தியருக்குத் திருமணக் கோலக் காட்சியருளுகிறார்.
ராமாயணத்தை எழுதிய வால்மீகி இந்தக் கோயிலில் சிவனை வழிபட்டதாகக் கூறப்படுகின்றது. இதனால், அந்த இடம் முதலில் "திருவால்மிகியூர்" என அழைக்கப்பட்டது, பின்னர் "திருவான்மியூர்" என மாற்றப்பட்டது. இந்தப் புனித ஆலயத்திற்கு எதிரே, வால்மீகியின் நினைவாக ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது.
தொண்டை வளநாட்டில் தேவாரத் திருத்தலங்கள் முப்பத்திரண்டு தலங்களுள் இருபத்தைந்தாவது தலமாக திருவான்மியூர் திகழ்கிறது. திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர், இத்தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளனர். சென்னை மாநகரின் கடற்கரையோரம் அமைந்துள்ள திருவான்மியூர், திருமயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவொற்றியூர் இவற்றில் முதன்மைத் தலமாக திருவான்மியூர் திகழ்கின்றது.
கோயில் நேரம்
| கிழமை | காலை | மாலை |
| ஞாயிற்றுக்கிழமை | 5.30–12.00 | 4.00–9.00 |
| திங்கட்கிழமை | 5.30–12.00 | 4.00–9.00 |
| செவ்வாய்க்கிழமை | 5.30–12.00 | 4.00–9.00 |
| புதன்கிழமை | 5.30–12.00 | 4.00–9.00 |
| வியாழக்கிழமை | 5.30–12.00 | 4.00–9.00 |
| வெள்ளிக்கிழமை | 5.30–12.00 | 4.00–9.00 |
| சனிக்கிழமை | 5.30–12.00 | 4.00–9.00 |
|
முகவரி
|
|
Keywords: Shiva Temples in Tamil Nadu, Famous Shiva Temples, Ancient Shiva Temples, Paadal Petra Sthalams, Tevaram Hymns, Thiruvasagam Lyrics, Sivapuranam Meaning, Devaram Songs, Siddhar Temples, Manikkavacakar, Appar Hymns, Sambandar Songs, Sundarar Hymns, Thiruvasagam Translation, Thiruvasagam Audio, Thiruvasagam Meaning, Thiruvasagam Lyrics Tamil, Thiruvasagam Lyrics in Tamil Translation, Thiruvasagam Lyrics PDF, Thiruvasagam Lyrics in Tamil, Thiruvasagam Lyrics in Tamil Transliteration, Thiruvasagam Lyrics in Tamil Transliteration PDF, Thiruvasagam Lyrics in Tamil Transliteration MP3, சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம் நந்தினி, திருச்சதகம், திருச்சதகம்-மெய்யுணர்தல், அறிவுறுத்தல், சுட்டறுத்தல், ஆத்ம சுத்தி, கைமாறு கொடுத்தால், அநுபோகசுத்தி, காருணியத்திறன்கள், ஆனந்தத் தழுந்தல், ஆனந்த பரவசம், ஆனந்தாதீதம் நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை, திரு அம்மானை, திருப்பொற் சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருஉந்தியார், திருத்தோள் நோக்கம், திருப்பொன்னூசல், அன்னைப் பத்து, குயிற்பத்து, திருத்தசாங்கம், திருப்பள்ளியெழுச்சி, கோயில் மூத்த திருப்பதிகம், கோயில் திருப்பதிகம், செத்திலாப் பத்து, அடைக்கலப் பத்து, ஆசைப்பத்து, அதிசயப் பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, திக்கழுக்குன்றப் பதிகம், கண்டபத்து, பிரார்த்தனைப் பத்து, குழைத்த பத்து, உயிருண்ணிப்பத்து, அச்சப்பத்து, திருப்பாண்டிப் பதிகம், பிடித்த பத்து, திருவேசறவு, திருப்புலம்பல், குலாப் பத்து, அற்புதப்பத்து, சென்னிப்பத்து, திருவார்த்தை, எண்ணப்பதிகம், யாத்திரைப் பத்து, திருப்படை எழுச்சி, திருவெண்பா, பண்டாய நான்மறை, திருப்படை ஆட்சி, ஆனந்தமாலை, அச்சோப் பதிகம்.





