திருவேடகம் ஏகடநாதேசுவரர் கோயில், தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். தொன்மையான நம்பிக்கையின்படி, சம்பந்தர் ஆற்றில் விடுத்த தலம் எதிரேறிச் கரையடைந்ததாக கூறப்படுகிறது. மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே அமைந்துள்ள திருவேடகம் கிராமத்தில் எழில்மிகு ஏடகநாதேசுவரர் கோயில் வீற்றுள்ளது. திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம், ஆன்மிக மகத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இத்தலத்தின் மூலவர் ஏடகநாதேசுவரர், தாயார் ஏலவார்குழலி. தலவிருட்சம் வில்வமரம், தீர்த்தங்கள் பிரம தீர்த்தக்குளம் மற்றும் வைகை ஆறாகும். வைகை நதி இங்கு தெற்கில் இருந்து வடக்காக ஓடுவதால், இத்தலம் காசிக்கு நிகரான மகத்துவம் உடையதாக போற்றப்படுகிறது. பிரம்மா, பராசரர், வியாசர் ஆகிய முனிவர்கள் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். இக்கோயிலில் உள்ள காலபைரவர் சன்னதி சிறப்பு வாய்ந்ததாக விளங்குகிறது.
மதுரையை அரசாண்ட பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்தவராக இருந்தார். மனைவி மங்கையர்க்கரசி, சிவபக்தியில் மிகுந்து, 63 நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். சைவத்தை பாதுகாக்க, அவர் திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்தார்.
சம்பந்தர் வந்தபோது, திருநீறு பூசுவதன் மூலம் கூன்பாண்டியனின் வெப்ப நோயை நீக்கினார். இதனால் ஆத்திரமுற்ற சமணர்கள், அவருடன் அனல் வாதமும் புனல் வாதமும் நடத்தினர். சமணர்கள் தங்கள் ஏட்டை தீயில் இட்டபோது, அது எரிந்து சாம்பலாகிவிட்டது. ஆனால், திருஞானசம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்டபோது, அது எரியாமல் பச்சையாகவே இருந்தது.
பின்னர், புனல் வாதத்தின் போது, சமணர்கள் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்டபோது, அது நீரோட்டத்துடன் கிற்று. ஆனால், சம்பந்தர் "வாழ்க அந்தணர்" எனத் தொடங்கும் பதிகம் எழுதிய ஏட்டை வைகை ஆற்றில் விட்டபோது, அது நீரோட்டத்தை எதிர்த்து சென்றது.
மதுரை பாண்டிய மன்னனின் மந்திரி குலச்சிறையார், குதிரையில் ஏறி, வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து சென்ற சம்பந்தரின் ஏட்டை பின் தொடர்ந்து சென்றார். அது ஒரு இடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. அந்த இடத்தில் பாண்டிய மன்னன் ஒரு சிவலிங்கத்தைக் கண்டான். அந்த இடத்தில் ஒரு ஆலயம் அமைத்தான். இதுவே திருவேடகம் என்று புகழப்படும், இந்த பாடல் பெற்றத் திருத்தலம்.
திருமணஞ்சேரியில் திருமணத்தடை நீங்க பரிகார பூஜைகள் செய்யப்படுவது போல, திருவேடகத்திலும் இவ்விதமான பூஜைகள் நடைபெறுகின்றன. திருமணஞ்சேரியைப் போலவே, திருமணப் பிரார்த்தனைக்குரிய தலமாக திருவேடகம் அறியப்படுகிறது.
இங்கு, ஏலவார்குழலிக்கு மாலை அணிவித்து, அதை வீட்டிற்கு கொண்டு சென்று 48 தினங்கள் தொடர்ந்து பூஜை செய்தால், திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் ஒரு நாள் தங்கி, இறைவனை முழுமனதுடன் பூஜை, அர்ச்சனை முதலிய வழிபாடுகளை மேற்கொண்டால், காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
கோயில் நேரம்
| கிழமை | காலை | மாலை |
| ஞாயிற்றுக்கிழமை | 6.30–12.00 | 4.30–8.00 |
| திங்கட்கிழமை | 6.30–12.00 | 4.30–8.00 |
| செவ்வாய்க்கிழமை | 6.30–12.00 | 4.30–8.00 |
| புதன்கிழமை | 6.30–12.00 | 4.30–8.00 |
| வியாழக்கிழமை | 6.30–12.00 | 4.30–8.00 |
| வெள்ளிக்கிழமை | 6.30–12.00 | 4.30–8.00 |
| சனிக்கிழமை | 6.30–12.00 | 4.30–8.00 |
|
முகவரி
|
|
Keywords: Shiva Temples in Tamil Nadu, Famous Shiva Temples, Ancient Shiva Temples, Paadal Petra Sthalams, Tevaram Hymns, Thiruvasagam Lyrics, Sivapuranam Meaning, Devaram Songs, Siddhar Temples, Manikkavacakar, Appar Hymns, Sambandar Songs, Sundarar Hymns, Thiruvasagam Translation, Thiruvasagam Audio, Thiruvasagam Meaning, Thiruvasagam Lyrics Tamil, Thiruvasagam Lyrics in Tamil Translation, Thiruvasagam Lyrics PDF, Thiruvasagam Lyrics in Tamil, Thiruvasagam Lyrics in Tamil Transliteration, Thiruvasagam Lyrics in Tamil Transliteration PDF, Thiruvasagam Lyrics in Tamil Transliteration MP3, சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம் நந்தினி, திருச்சதகம், திருச்சதகம்-மெய்யுணர்தல், அறிவுறுத்தல், சுட்டறுத்தல், ஆத்ம சுத்தி, கைமாறு கொடுத்தால், அநுபோகசுத்தி, காருணியத்திறன்கள், ஆனந்தத் தழுந்தல், ஆனந்த பரவசம், ஆனந்தாதீதம் நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை, திரு அம்மானை, திருப்பொற் சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருஉந்தியார், திருத்தோள் நோக்கம், திருப்பொன்னூசல், அன்னைப் பத்து, குயிற்பத்து, திருத்தசாங்கம், திருப்பள்ளியெழுச்சி, கோயில் மூத்த திருப்பதிகம், கோயில் திருப்பதிகம், செத்திலாப் பத்து, அடைக்கலப் பத்து, ஆசைப்பத்து, அதிசயப் பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, திக்கழுக்குன்றப் பதிகம், கண்டபத்து, பிரார்த்தனைப் பத்து, குழைத்த பத்து, உயிருண்ணிப்பத்து, அச்சப்பத்து, திருப்பாண்டிப் பதிகம், பிடித்த பத்து, திருவேசறவு, திருப்புலம்பல், குலாப் பத்து, அற்புதப்பத்து, சென்னிப்பத்து, திருவார்த்தை, எண்ணப்பதிகம், யாத்திரைப் பத்து, திருப்படை எழுச்சி, திருவெண்பா, பண்டாய நான்மறை, திருப்படை ஆட்சி, ஆனந்தமாலை, அச்சோப் பதிகம்.








