hero-img1

அன்னதான வழிகாட்டுதல்கள் மற்றும் கால அட்டவணை

0 Comments

சிவன்மனை அன்னதான தன்னார்வலர்களுக்கான வழிகாட்டுதல்கள் (Guidelines for Volunteers)

அன்பான தன்னார்வலர்களுக்கு வணக்கம். சிவன்மனையின் காலை நேர நித்ய அன்னதான சேவையில் இணைந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். உணவைப் பக்தர்களுக்குச் சீராகவும், தூய்மையாகவும் வழங்குவதற்குப் பின்வரும் வழிமுறைகளைக் கனிவுடன் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்:

நேரம் & அன்னதான அளவு:

  • அன்னதான நேரம்: காலை 8:45 மணி முதல் 9:45 மணி வரை.
  • சாதாரண நாட்களில் 80 - 100 பக்தர்களும், சிறப்பு நித்திய அன்னதான நாட்களில் 100 - 150 பக்தர்களும் வருகை தருவர்.
  • சேவைக்கு வரும் தன்னார்வலர்கள் காலை 8:45 மணிக்குள் உணவை சாப்பிட்டுவிட்டு சேவையைத் தொடங்கலாம்.
  • முதலில் பரிமாறும்போது ஒன்றரை கரண்டி உணவு வழங்கவும். பக்தர்கள் கூடுதல் உணவு கேட்டால், பரிமாறிய உணவைச் சாப்பிட்டு முடித்த பின் மீண்டும் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அறிவுறுத்தவும்.
  • அன்னதான நிகழ்விற்கு முந்தைய நாள், சிவன்மனை குழுவிலிருந்து உங்களுக்கு நினைவூட்டல் அழைப்பு (Reminder Call) வரும்.

சுத்தம் & சுகாதார முறைகள்:

  • உணவு பரிமாறுவதற்கு முன் கட்டாயம் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.
  • கண்கள், மூக்கு, அல்லது தலைமுடியைத் தொட்ட பிறகு, மீண்டும் கைகளைக் கழுவாமல் உணவைத் தொடக்கூடாது.
  • உணவைக் கரண்டியால் மட்டுமே பரிமாற வேண்டும்; கைகளால் தொடக் கூடாது. (மீதமாகும் உணவு மதியம் 12:00 மணி வரை வெளியில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்பதால் கெட்டுப்போகாமல் இருக்க இது அவசியம்).
  • உணவு பாத்திரங்களைத் தரையில் நேரடியாக வைக்கக் கூடாது. (தரையில் உள்ள முடி அல்லது தூசி, மூடியை மூடும்போது உணவில் விழ வாய்ப்புள்ளது).

உணவு கையாளும் முறை & பாதுகாப்பு:

  • உணவு இரண்டாம் தளத்திலிருந்து தரைத்தளத்திற்கு (அன்னதான இடம்) அங்குள்ள நபர்களின் உதவியோடு கொண்டு வரப்படும். அங்கு ஆட்கள் இல்லாத பட்சத்தில், தன்னார்வலர்கள் இரண்டாம் தளத்திற்குச் சென்று உணவை எடுத்து வரலாம்.
  • உணவு பற்றாக்குறை ஏற்பட்டால், அங்குள்ள பிஸ்கட்டுகளை வழங்கலாம்.
  • தரக்கட்டுப்பாடு சுகாதாரம் கருதி, வெளியில் தயார் செய்த உணவுகள் சிவனைமனைக்குள் பரிமாறப்படுவதில்லை.
  • சிறுவர்கள் உணவை வீணாக்க வாய்ப்புள்ளதால், உணவு பரிமாறும் முறையைச் சரியாகக் கற்றுக்கொள்ளும் வரை சிறுவர்களை அனுமதிப்பதில்லை. 
  • பக்தர்கள் உணவை வீணாக்கினால், அதைத் தவிர்க்குமாறு எடுத்துரைக்கவும்.

பார்சல் வழிகாட்டுதல்:

  • அன்னதானத்திற்குப் பிறகு உணவு மீதம் இருந்தால் மட்டுமே, காலை 11:00 மணிக்கு மேல் பார்சல் வழங்கப்படும்.
  • அன்னதானம் நிறைவடையும் வரை பார்சல் உணவுகள் வழங்கப்பட மாட்டாது.

பொதுவான தகவல்கள்:

  • பக்தர்கள் யாரேனும் பணம், புத்தகங்கள், மருத்துவ உதவி மற்றும் தேர்வுக்கட்டணம் போன்ற உதவிகளைக் கேட்டால், சிவன்மனை சார்பாக "அன்னதான சேவை மட்டுமே வழங்கப்படுகிறது" என்பதைப் தெளிவுபடுத்தவும்.
  • ஏதேனும் சந்தேகங்கள் அல்லது விளக்கங்கள் தேவைப்பட்டால், தயவுசெய்து 9003059000 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும்.

உங்கள் மேலான சேவைக்கு மீண்டும் நன்றி!

அன்னதானம் வழங்குபவர் நாட்காட்டி

Written by Sivanmanai

உங்கள் பகுதியில் உள்ள திருக்கோவில்களில் இலவச கைலாய வாத்திய சேவை மற்றும் சிவபுராணம் விளக்கவுரை நிகழ்ச்சியை நடத்த விரும்பினால், தயவுசெய்து 900-305-9000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் - செல்வி காயத்ரி மு, மேலாளர், சிவன்மனை, சென்னை.

Leave a Reply