hero-img1

வெங்கடேஷ் நாராயணன் - உபந்யாசகரின் விவரம்

0 Comments

சிவன்மனை: திருவாசகத் தொண்டில் வெங்கடேஷ் நாராயணன் 

வேலை மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டையும் சமச்சீராகக் கொண்டு செல்லும் திரு. வெங்கடேஷ் நாராயணன் அவர்கள், 37 ஆண்டுகால கார்ப்பரேட் அனுபவத்தையும் ஆழ்ந்த சைவப் பற்றையும் கொண்டவர். இவர் L&T, KCP மற்றும் Latex International போன்ற முன்னணி நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இவர் விநியோகச் சங்கிலி மேலாண்மை (Supply Chain Management), கொள்முதல் (Procurement) மற்றும் புதிய தயாரிப்பு மேம்பாடு (New Product Development) ஆகிய துறைகளில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணத்துவம் பெற்றவர்.  மேலும் அவர்,  இந்தியக் குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சிபெற்று (Indian Civil Service) (IRAS 2000 Batch), இந்திய இரயில்வே அமைச்சகத்தில் (Ministry of Railways) பணியாற்றி ஓய்வு பெற்றார். இத்தகைய உயரிய தொழில்முறைப் பின்னணியைக் கொண்ட இவர், தற்போது உலகியல் கடமைகளுக்கு அப்பாற்பட்டு, மடிப்பாக்கத்தில் உள்ள 'சிவன்மனை' அமைப்பின் மூலம் பல்வேறு ஆன்மீகத் தொண்டுகளை ஆற்றி வருவதுடன், எம்பெருமான் ஈசனின் திருத்தொண்டில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வருகிறார்.

கல்வி மற்றும் தொழில் பின்னணி

  • முதன்மை ஆலோசகர்: இவர் Fhyzics Business Consultants Pvt. Ltd. நிறுவனத்தின் முதன்மை ஆலோசகராகத் தற்போது செயல்பட்டு வருகிறார்.
  • கல்வி: இவர் ஒரு இயந்திரப் பொறியாளர் (Mechanical Engineer) மற்றும் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் MBA முடித்தவர்.
  • நிபுணத்துவம்: 'பிஸினஸ் அனாலிசிஸ்' (Business Analysis) துறையில் உலகளாவிய நிபுணத்துவம் பெற்றவர்.
  • ஆசிரியர் பணி: பாரதிதாசன் மேலாண்மை நிறுவனம் (BIM) மற்றும் SSN மேலாண்மைப் பள்ளியில் கௌரவப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
  • மாணவர் வழிகாட்டி: சிவில் சர்வீஸ் தேர்விற்குத் தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்டும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் கௌரவ இயக்குநராகவும்  பணியாற்றி வருகிறார். 

இவ்வாறு கல்வி, தொழில் மற்றும் ஆன்மீகம் என மூன்றிலும் சிறந்து விளங்கும் இவர், எஞ்சிய வாழ்நாளை எம்பெருமான் ஈசனின் திருத்தொண்டிலேயே கழிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு திறம்படப் பணியாற்றி வருகிறார்.  

சைவ சமயப் பணி

திரு. வெங்கடேஷ் நாராயணன் அவர்கள், "சிவபுராணத்தின் உட்பொருளை பக்தர்கள் ஆழமாகப் புரிந்து கொண்டு, சைவ சமயத்தின் மேன்மைகளைப் போற்றிப் பரவ வேண்டும்" என்ற உயரிய நோக்கில் தனது ஆன்மீகப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.
 
இந்த மாய உலகில் சிக்கித் தவிக்கும் ஆன்மாக்கள் உய்வு பெறவும், உண்மையான ஞானத்தை அடையவும் சிவபுராண விளக்க உரைகள் ஒரு வழிகாட்டியாக அமையும் என்று அவர் நம்புகிறார். இதற்காகவே, பல்வேறு திருக்கோயில்களில் சிவபுராணப் பாராயணங்கள் மற்றும் விரிவுரைகளை நடத்தி,  சகல பக்தர்களும்  ஈசனின் அருளைப் பெறும் வகையில் அரும்பணியாற்றி வருகிறார்.

ஆன்மீகப் பணிகள் & சொற்பொழிவுகள்

திரு. வெங்கடேஷ் நாராயணன் அவர்கள் பல்வேறு சிவன் ஆலயங்களில் திருவாசக விளக்க உரை மற்றும் சிவபுராணச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி, பக்தர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் இவர் சொற்பொழிவு ஆற்றிய சில முக்கியத் தலங்கள்:

  • நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில், திருநெல்வேலி.
  • வெற்றி விநாயகர் கோவில், திருநெல்வேலி.
  • உலகாம்பிகை திருக்கோவில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி.
  • அலியாபதீஸ்வரர் கோவில், திருநெல்வேலி.
  • செப்பறை அழகிய கூத்தர் கோயில், திருநெல்வேலி.


சிவன்மனை இதர சேவைகள்

 சிவன்மனை அமைப்பின் மூலம் பக்தர்களுக்காகப் பல்வேறு சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன:

  • நித்திய அன்னதானம்: 2020 முதல் சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள சிவன்மனையில் நாள்தோறும் காலை 8:30 மணி முதல் 10:00 மணி வரை சுமார் 80 முதல் 100 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம்.
  • கைலாய வாத்தியம்: மடிப்பாக்கம் சிவ-விஷ்ணு ஆலயத்தில் பிரதோஷம் போன்ற விசேஷ நாட்களில், 15 பேர் கொண்ட குழுவாக ஒன்றிணைந்து, பாரம்பரிய கைலாய வாத்திய இசையோடு வழிபாட்டினைச் செய்து வருகிறோம்.
  • கோ பூஜை: மாதந்தோறும் பௌர்ணமி நாட்களில் சிவன்மனை சார்பில் முறையாகக் கோ பூஜைகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

திருமுறைப் பணிகள் 
 
சிவபுராணப் பயிற்சி: சிவபுராணத்தை அனைவரும் அறிய வேண்டும் என்ற நோக்கில், சிறார்களுக்குச் சிவபுராணம் மனப்பாடம் மற்றும் பாராயணப் போட்டிகளை நடத்தி, அவர்களுக்குச் சான்றிதழ் வழங்கி உற்சாகப்படுத்தி வருகிறார்.
சிவபுராணம் மனப்பாட-பாராயணம் போட்டி பதிவு விண்ணப்பம் 
https://share.hsforms.com/1ToJe6Tr8T36UutwjO5hOnA1upbs
 
திருவாசகம் எனும் தேன் (WhatsApp குழு): 'திருவாசகம் எனும் தேன்' என்ற வாட்ஸ்அப் குழுவின் மூலம் தினந்தோறும் திருவாசகத்தின் ஒரு பகுதிப் பாடலை விளக்கத்துடன் பதிவேற்றி வருகிறார். இதன் மூலம் பக்தர்கள் பாடலின் பொருளைப் புரிந்து கொண்டு, அதைத் தம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வழிவகை செய்கிறார்.
Clik here to Join Thiruvasagam WhatsApp Group

திருமுறைச் சொற்பொழிவுகள்: தற்போது  நடைபெற்று வரும் திருமுறை சொற்பொழிவுகள் குறித்த முழுமையான விவரங்களைக் காண கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தவும்.
Thirumurai Program

சிவன்மனை YouTube சேனல்: திருமுறைப் பாடல்கள், ஆன்மீகச் சொற்பொழிவுகள் மற்றும் வழிபாட்டு முறைகளை உலகெங்கும் உள்ள அடியார்கள் கண்டு பயன்பெறும் வகையில் 'சிவன்மனை' யூடியூப் சேனல் வாயிலாகப் பதிவேற்றி வருகிறோம்.

Sivanmanai YouTube - சிவன்மனை யூடியூப் சேனலைத் தரிசிக்க.

மின்நூல் (eBook) சேவை: திருவாசகம் மற்றும் தேவாரப் பாடல்களை எளிய விளக்கங்களுடன் கூடிய மின்நூலாக (eBook) தயாரித்து, அதை பக்தர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பணிகளையும் தற்போது மேற்கொண்டு வருகிறார்.

Written by Sivanmanai

உங்கள் பகுதியில் உள்ள திருக்கோவில்களில் திருவாசகம் மற்றும் சிவபுராணம் விளக்கவுரை நிகழ்ச்சியை நடத்த விரும்பினால், தயவுசெய்து 900-305-9000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் - செல்வி காயத்ரி மு, மேலாளர், சிவன்மனை, சென்னை.

Leave a Reply