hero-img1

45-Thiruvasagam-Yathiraippathu

திருச்சிற்றம்பலம்

பூவார் சென்னி மன்னன்எம்
புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவாது உள்ளம் கலந்து உணர்வாய்
உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டு அன்பாய்
ஆட்பட்டீர் வந்து ஒருப்படுமின்
போவோம் காலம் வந்தது காண்
பொய்விட்டுஉடையான்கழல்புகவே. (8)

42-Thiruvasagam-Chennippathu

திருச்சிற்றம்பலம்

தேவதேவன்மெய்ச்சேவகன்
தென் பெருந்துறை நாயகன்
மூவராலும் அறிஒணா முதல்
ஆய ஆனந்த மூர்த்தியான்
யாவ ராயினும் அன்பர்அன்றி
அறிஒணா மலர்ச் சோதியான்
தூய மாமலர்ச் சேவடிக்கண் நம்
சென்னிமன்னிச்சுடருமே. (8)

05(2)-Thiruvasagam-Arivuruthal

திருச்சிற்றம்பலம்

நாடகத்தால் உன்அடியார் போல்
நடித்து நான்நடுவே
வீடகத்தே புகுந்திடுவான்
மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே
இடையறா அன்புஉனக்கு என்
ஊடகத்தே நின்றுஉருகத்
தந்தருள்எம்உடையானே. (8)

03-Thiruvasagam-Thiruvandapahuthi

திருச்சிற்றம்பலம்

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இல்நுழைகதிரின்துன்அணுப்புரையச் (05)

02-Thiruvasagam-Keerthi Thiruagaval

திருச்சிற்றம்பலம்

தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல்உயிர்எல்லாம்பயின்றனன்ஆகி
எண்ணில்பல்குணம்எழில்பெறவிளங்கி
மண்ணும்விண்ணும்வானோர்உலகும்
துன்னியகல்விதோற்றியும்அழித்தும் (5)

50-Thiruvasagam-Aanandamalai

திருச்சிற்றம்பலம்

மின்நேர்அனையபூங்கழல்கள்
அடைந்தார் கடந்தார் வியன்உலகம்
பொன்நேர் அனையமலர்கொண்டு
போற்றா நின்றார் அமரர்எல்லாம்
கல்நேர் அனையமனக்கடையாய்க்
கழிப்புண்டு அவலக் கடல்வீழ்ந்த
என்நேர் அனையேன்இனிஉன்னைக்
கூடும் வண்ணம்இயம்பாயே. (8)

48-Thiruvasagam-Pandaaya Nanmarai

திருச்சிற்றம்பலம்

பண்டாய நான்மறையும் பால்அணுகா மால்அயனும்
கண்டாரும் இல்லை கடையேனைத்—தொண்டாகக்
கொண்டருளுங் கோகழிஎம் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோகைம்மாறுஉரை. (4)

Leave a Reply