திருச்சிற்றம்பலம்
பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே
பற்றுநான் மற்றுஇலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத்துஅரசே
திருப்பெருந் துறைஉறை சிவனே
ஆரொடு நோகேன் ஆர்க்குஎடுத்து உரைக்கேன்
ஆண்டநீ அருளிலை யானால்
வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன்றுஅருள்புரியாயே. (8)






Leave a Reply