hero-img1

Sivanmanai

உங்கள் பகுதியில் உள்ள திருக்கோவில்களில் இலவச கைலாய வாத்திய சேவை மற்றும் சிவபுராணம் விளக்கவுரை நிகழ்ச்சியை நடத்த விரும்பினால், தயவுசெய்து 900-305-9000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் - செல்வி காயத்ரி மு, மேலாளர், சிவன்மனை, சென்னை.

29-Thiruvasagam-Aruthpaththu

திருச்சிற்றம்பலம்

சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே
சுரிகுழல் பணைமுலை மடந்தை
பாதியே பரனே பால்கொள் வெண்ணீற்றாய்
பங்கயத்து அயனும் மால்அறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்
நிறைமலர்க் குருந்தம் மேவியசீர் 
ஆதியே அடியேன் ஆதரித்து அழைத்தால்
அதெந்துவே என்று அருளாயே. (8)

05(3)-Thiruvasagam-Suttaruthal

திருச்சிற்றம்பலம் 

வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளந்தாழ் உறுபுனலில் கீழ் மேலாகப்
பதைத்துஉருகும் அவர்நிற்க என்னைஆண்டாய்க்கு
உள்ளந்தாள் நின்று உச்சிஅளவு நெஞ்சாய்
உருகாதால் உடம்பெல்லாம் கண்ணாய் அண்ணா
வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம்
கண்இணையும் மரமாம்தீ வினையி னேற்கே. (8)

16-Thiruvasagam-Thirupponnusal

திருச்சிற்றம்பலம்

சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக

ஏராரும் பொற்பலகை ஏறி இனிதுஅமர்ந்து
நாராயணன் அறியா நாள்மலர்த்தாள் நாய்அடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்தாள் இணைபாடிப்
போரார் வேற்கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ. (6)

24-Thiruvasagam-Adaikkalappaththu

திருச்சிற்றம்பலம்
          
செழுக்கமலத் திரள்அனநின்
சேவடி சேர்ந்தமைந்த
பழுத்தமனத்து அடியருடன்
போயினர் யான் பாவியேன்
புழுக்கன்உடைப் புன்குரம்பைப்
பொல்லாக்கல்வி ஞானம்இலா
அழுக்குமனத்து அடியேன்
உடையாய் உன் அடைக்கலமே. (8)

21-Thiruvasagam-Koyil Mootha Thiruppathigam

திருச்சிற்றம்பலம்

உடையாள் உன்தன் நடுவுஇருக்கும் 

உடையாள் நடுவுள் நீஇருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும் 
இருப்ப தானால் அடியேன்உன்
அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் 
புரியாய் பொன்னம்பலத்துஎம்
முடியா முதலே என்கருத்து முடியும் 
வண்ணம் முன்னின்றே. (8)

19-Thiruvasagam-Thiruthasaangam

திருச்சிற்றம்பலம்

ஏர்ஆர் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்
சீர்ஆர் திருநாமம் தேர்ந்து உரையாய்-ஆரூரன்
செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல்
எம்பெருமான் தேவர்பிரான் என்று. (4)

சிவன்மனை வழங்கும் திருவாசக ஞானவினா போட்டி

மாணிக்கவாசகப் பெருமானால் அருளிச்செய்யப்பட்ட திருவாசகத்தின் மேன்மையையும், அதில் புதைந்துள்ள ஆன்மீகத் தத்துவங்களையும் இளைய தலைமுறையினரும் அனைத்துத் தரப்பு

Leave a Reply