hero-img1

Sivanmanai

உங்கள் பகுதியில் உள்ள திருக்கோவில்களில் இலவச கைலாய வாத்திய சேவை மற்றும் சிவபுராணம் விளக்கவுரை நிகழ்ச்சியை நடத்த விரும்பினால், தயவுசெய்து 900-305-9000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் - செல்வி காயத்ரி மு, மேலாளர், சிவன்மனை, சென்னை.

திருவாசகக்குறள்

திருவாசகம் என்பது மாணிக்கவாசகர் அருளிய, பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாகப் போற்றப்படும் அருட்பெருநூல். இறைவனின் திருவருளால் உள்ளம் உருகி, ஆன்மா சிவத்துடன் ஒன்றிடும் பேரனுபவத்தை எளிமையான, ஆழமான தமிழில் வெளிப்படுத்தும்

12-Thiruvasagam-Thiruchazhal

திருச்சிற்றம்பலம்

பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கு அரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டுஎன்னை
ஈசன்அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ. (4)

05(10)-Thiruvasagam-Aanandateedam

திருச்சிற்றம்பலம்

மாறு இலாத மாக்கருணை வெள்ளமே
வந்து முந்திநின் மலர்கொள் தாள்இணை
வேறு இலாப் பதப்பரிசு பெற்றநின்
மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார்
ஈறு இலாதநீ எளியை ஆகிவந்து
ஒளிசெய் மானுடம் ஆக நோக்கியும்
கீறு இலாத நெஞ்சுஉடைய நாயினேன்
கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே. (8)

10-Thiruvasagam-Tirukothumpi

திருச்சிற்றம்பலம் 

பூஏறு கோனும் புரந்தரனும் பொற்புஅமைந்த
நாஏறு செல்வியும் நாரணணும் நான்மறையும்
மாஏறு சோதியும் வானவருந் தாம்அறியாச்
சேஏறு சேவடிக்கே சென்றுஊதாய் கோத்தும்பீ. (4)

05(9)-Thiruvasagam-Aanantha Paravasam

திருச்சிற்றம்பலம்

விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது
என்று இங்கு எனை வைத்தாய்
இச்சைக்கு ஆனார் எல்லாரும் 
வந்து உன்தாள் சேர்ந்தார்
அச்சத்தாலே ஆழ்ந்திடு
கின்றேன் ஆரூர் எம்
பிச்சைத் தேவா என்நான்
செய்கேன் பேசாயே. (8)

05(8)-Thiruvasagam-Aanandhathu Azhunthal

திருச்சிற்றம்பலம்

புணர்ப்பது ஒக்க எந்தை என்னை 
ஆண்டு பூண நோக்கினாய்
புணர்ப்பது அன்றுஇது என்றபோது நின்னொடு
என்னொடு என்னிதாம்
புணர்ப்பது ஆக அன்று இதுஆக 
அன்பு நின்கழல்கணே
புணர்ப்பது ஆக அங்கணாள 
புங்கம் ஆன போகமே. (8)

43-Thiruvasagam-Thiruvarthtai

திருச்சிற்றம்பலம்

மாதுஇவர் பாகன் மறைபயின்ற 
வாசகன் மாமலர் மேயசோதி
கோதில் பரங்கருணை அடியார் 
குலாவும் நீதிகுணம் ஆகநல்கும்
போதலர் சோலைப் பெருந்துறைஎம் 
புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து
ஆதிப் பிரமம் வெளிப்படுத்த 
அருள்அறிவார் எம்பிரான் ஆவாரே. (8)

Leave a Reply